திண்டுக்கல்லில் பட்டப்பகலில் திமுக கவுன்சிலரின் தந்தை வெட்டிக்கொலை முழு விவரம்
திண்டுக்கல் மாநகராட்சியின் 25-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் சிவக்குமார். இவரது தந்தை நாகராஜ். இவர் மார்க்கெட்டில் இருந்து பாறைப்பட்டி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மர்ம கும்பல் நாகராஜ் மீது மிளகாய் பொடி தூவியவுடன் தடுமாறி கீழே விழுந்த நாகராஜை ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 25-ஆவது வார்டு திமுக கவுன்சிலராக உள்ள சிவாவின் தந்தை இன்று இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அவர் மீது மிளகாய் பொடி தூவி ஓட ஓட வெட்டியுள்ளார்கள். இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்ப இடத்திலேயே அவர் இறந்துள்ளார்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தும் வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்