Breaking News

சுகன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் நால்வர் - முழு விபரம்

அட்மின் மீடியா
0

இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்குச் செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரின் விவரங்களை பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார்.


மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், இன்று விண்வெளிக்கு செல்லும் வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை அறிமுகப்படுத்தினார். 

அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்ல உள்ளனர். இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக விண்வெளி செல்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

ககன்யான் திட்டம் என்றால் என்ன:-

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில், இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படுவார்கள்.

இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கி.மீ சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள். பிறகு மீண்டும் பூமியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு இந்திய கடற்பரப்பில் விழச் செய்து மீட்டு வரப்படுவார்கள். இதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.

ககன்யான் திட்டத்தில் விண்வெளி செல்லும் 4 வீரர்கள் 

பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்,குரூப் கேப்டன்

அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன்

அங்கத் பிரதாப்,குரூப் கேப்டன்

சுபான்ஷு சுக்லா, விங் கமாண்டர்

ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜித் கிருஷ்ணனும் ஒருவர்!

1982-ல்  சென்னையில் பிறந்த இவர், உதகையில் உள்ள வெல்லிங்டன் ராணுவ |பயிற்சி கல்லூரியில் படித்துள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் தேர்ச்சி பெற்று 2003ல் இந்திய விமானப் படையில் சேர்ந்த இவர், சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்2,900 மணி நேரங்கள் பறக்கும் அனுபவம் கொண்டுள்ளார். ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் கல்லூரியில் பயின்றுள்ளார்

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/RavishekhawatS/status/1762420363978318190

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.isro.gov.in/Gaganyaan.html

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback