Breaking News

விவசாய நிலத்தில் கூலி வேலை செய்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் வழங்கிய மாமியார், மருமகள் கைது..!

அட்மின் மீடியா
0

விவசாய நிலத்தில் கூலி வேலை செய்த பெண்களுக்கு  கொட்டாங்குச்சியில் தேநீர் வழங்கிய மாமியார், மருமகள் கைது..!

தருமபுரி மாவட்டம் மாரப்பநாயக்கன்பட்டியில் புவனேஷ்வரன் என்பவரின் விவசாய நிலத்தில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விவசாயப் பணிகளில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 5 பெண்கள் கூலி வேலைக்குச் சென்றுள்ளனர்.



அப்போது வேலை செய்த அந்த பெண்களுக்கு தோட்ட உரிமையாளர்கள் கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்தனர். மேலும், தோட்டத்தின் உரிமையாளருக்கு மட்டும் சில்வர் டம்ளரில் தேநீர் வழங்கியுள்ளார்கள்

இந்த சாதியபாகுபாடு சம்பவத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட செல்லி (50) என்ற பெண் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், டீ கொடுத்த மருமகள் தரணி மற்றும் அவரது மாமியார் சின்னதாய் ஆகியோரிடம் காம்பை நல்லூர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினார்.மேலும் விசாரணைக்குப் பிறகு, தரணி, சின்னத்தாய் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்தச் சட்டம் 2015-ன் கீழ் எஸ்சி, எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback