Breaking News

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

அட்மின் மீடியா
0

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

தலைநகர் டெல்லியில் இன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய உலகளாவிய தொழில் மாநாட்டில் உள்துறை மந்திரி அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.அப்போது பேசிய அவர்

அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நமது நாட்டின் ஒரு சட்டம். தேர்தலுக்கு முன் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இதில் எந்தக் குழப்பமும் இல்லை என்றார்

நாடாளுமன்ற முடிவு என்ன என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரவேண்டும் என்பதை காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளும் தெரிந்துகொண்டன. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370ஐ நாங்கள் நீக்கினோம். ஆகையால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பா.ஜ.க.வுக்கு 370 தொகுதிகளில் வெற்றியை கொடுப்பார்கள், 

தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் என நம்புகிறேன்.

குடியுரிமை திருத்தச்சட்டம் 2019ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. விதிகள் வெளியிடப்பட்டப்பின் குடியுரிமை திருத்தச்சட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அமல்படுத்தப்படும். 

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நமது இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு தூண்டப்பட்டுள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் மதரீதியில் தாக்குதலுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு வந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கவே குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்க அல்ல என்றார்

குடியுரிமை சட்டதிருத்த மசோதா என்றால் என்ன? 

பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது. அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள். 

ஆனால் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினர்களுக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும்,  இந்த சட்டத் திருத்தம் அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்கிறது. 

1955ல் கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் சட்ட திருத்தம்தான் இந்த இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகும். 

இந்த பழைய சட்டத்தின் படி இந்தியாவில் பிறந்தவர்களும் இந்தியாவிற்கு முறையாக அனுமதியோடு வந்து 11 வருடங்கள் வாழ்ந்தவர்களும் மட்டுமே இந்திய குடியுரிமை பெற முடியும். முறையின்றி இந்தியாவில் குடியேறிய யாரும் இந்தியாவில் குடியுரிமை பெற முடியாது. 

ஆனால் தற்போது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே இந்த திருத்தம். முன்பெல்லாம் முறையின்றி இந்தியாவில் குடியேறினால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள். ஆனால் புதிய சட்டப்படி அரசு அவர்களை கைது செய்யாது அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும். 

மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.  ஆனால் இதில் இஸ்லாமியர்களை சேர்க்கவில்லை

ஆனால் இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனை தொடர்ந்து பல மாநிலங்களில் தொடர் போராட்டம் நடந்தது, மேலும் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் மத்திய அரசு கிடப்பில் போட்டு உள்ளது. அதேநேரம் இந்த சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு கூறி வருகிறது. 

நாடாளுமன்ற நடைமுறைகளின்படி எந்தவொரு சட்டத்துக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த 6 மாதங்களுக்குள் அதற்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும். ஆனால் சிஏஏ-வை பொறுத்தவரை இந்த காலக்கெடுவை மத்திய அரசு கடந்த 2020 முதல் தொடர்ந்து நீட்டித்து வருகின்றது

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback