Breaking News

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேறியது முழு விவரம்

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வந்தார்

இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல், திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

2014ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்து நரேந்திர மோடி பிரதமரானது முதல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை மோடி வலியுறுத்தி வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவும் அமைக்கப்படுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்யும் நடவடிக்கையை கைவிடக் கோரியும் சட்டப்பேரவையில் 2 தனித் தீர்மானங்களை தாக்கல் செய்து, பேசி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback