சென்னை ஆவடி பணிமனை பராமரிப்பு காரணமாக ரயில்கள் ரத்து - முழு விவரம்
ஆவடி பணிமனையில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பிப்.17 ம் தேதி இரவு 10.25 முதல் பிப்.18 காலை 4.30 வரை, ஆவடி தடத்தில் இயங்கும் 15 புறநகர் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது
மேலும் 12 புறநகர் ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது
அதேபோல் 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
பிப்ரவரி 17ம் தேதி இரவு 10:25 மணி முதல் பிப்ரவரி 18ம் தேதி காலை 4:30 மணிவரை ஆவடி வழித்தடத்தில் இயங்கும் 15 புறநகர் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 12 புறநகர் ரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுவதாகவும், 5 ரயில்கள் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பட்டாபிராம் ரயில் நிலையம், ஆவடி ரயில் நிலையம்,. மூர் மார்க்கெட் ரயில் நிலையம் ஆகிய ரயில் நிலையங்களில் பகுதியாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், அண்ணனூர், இந்து கல்லூரி, பட்டாபிராம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சில ரயில்கள் நின்று செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்


