யார் போன் செய்தாலும் அழைப்பவர் பெயர் செல்போனில் காட்டவேண்டும் ட்ராய் பரிந்துரை
இந்தியாவில் உள்ள நெட்வொர்க் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்புகளின் போது அவர்களின் பெயர்களை போன் டிஸ்பிளேயில் காண்பிக்கும் அம்சத்தை வழங்குமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய் (TRAI) பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பல்வேறு நெர்ட்வொர்க்களை பயன்படுத்தி வருகின்றனர். புதிய நம்பர்களில் இருந்து அழைப்புகள் வரும்போது பெயர் வருவதில்லை, நம்பர் மட்டுமே வரும். இதனால் பலர் true caller போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள நெட்வொர்க் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்புகளின் போது அவர்களின் பெயர்களை போன் டிஸ்பிளேயில் காண்பிக்கும் அம்சத்தை வழங்குமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய் (TRAI) பரிந்துரை செய்துள்ளது.டிராய் அமைப்பின் பரிந்துரையை ட்ரூ காலர் நிறுவனம் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக ட்ரூ காலர் நிறுவனம் கூறுகையில், இந்தப் புதிய வசதியை அரசு அமல்படுத்தினால் தங்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள் தொழில்நுட்பம்
