Breaking News

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன் ஆளுநர் விளக்கம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது குறித்து ஆளுநர் ரவி விளக்கம் முழு விவரம்


தமிழ்நாடு அரசின் இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையானது ஆளுநரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. 

அதன்படி இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை புரிந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. அவர்கள் தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரிக்கப்பட்டதாக கூறி அவர் தமிழக அரசின் உரையை படிக்காமல் வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த், ஜெய் பாரத் என குறிப்பிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார் 

இதைத்தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தமிழ்நாடு அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை வாசித்தார்.பின்னர் தமிழகத்தில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட போது உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை. பிரதமர் நிதியில் இருந்து ஆளுநர் 50ஆயிரம் கோடி வாங்கி தரவேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சவார்கர் வழியில் கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள், இந்த சட்ட மன்றத்தில் இருப்பவர்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என கூறினார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்

                       

சட்டப்பேரவையில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது அதில். 

நடந்த நிகழ்வுகள் தொடர்பான தமிழ்நாடு ஆளுநர் மாளிகை செய்தி வெளியீடு
இன்று, பிப்ரவரி 12, 2024அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது நடந்த நிகழ்வுகள் பின்வருமாறு:


1) கடந்த 09.02.2024 அன்று அரசிடமிருந்து ஆளுநரின் வரைவு உரை ஆளுநர் மாளிகையில் பெறப்பட்டது. ஆளுநர் உரையில் உண்மைக்கு மாறான தகவல்கள் பல பத்திகளில் இடம் பெற்றிருந்தன.

2) மாண்புமிகு ஆளுநர் கீழ்க்கண்ட கருத்துக்களைத் தெரிவித்து கோப்பைத் திருப்பி அனுப்பினார்.
(அ) தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் மற்றும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், முடிவிலும் அதை இசைத்திட வேண்டும். இது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் ஆகியோருக்கு ஆளுநர் கடந்த காலங்களிலும் கடிதங்களை எழுதியிருந்தார்.
(ஆ) ஆளுநரின் உரை என்பது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும் மற்றும் "சட்டமன்றம் கூடுவதற்கான காரணங்களை" சட்டமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இதை தவிர்த்து உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புவதற்கும், பாகுபாடான
அரசியல் கருத்துக்களை தெரிவிப்பதற்காக இருக்கக்கூடாது.

3) மாண்புமிகு ஆளுநர் அளித்த அறிவுரையை தமிழ்நாடு அரசு புறக்கணித்து விட்டது.

4) மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இன்று (பிப்ரவரி 12, 2024) காலை 10:00 மணியளவில் சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர், மாண்புமிகு முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆளுநர் உரையில் முதல் பத்தியை படித்தார். அதில் திருவள்ளுவரின் திருக்குறள் (738) அடங்கியுள்ளது. அதன்பிறகு ஆளுநர் உரையில் உண்மைக்கு புறப்பான தகவல்கள் பல பத்திகளில் இடம் பெற்றிருந்ததை கருத்தில் கொண்டு, அரசியலமைப்பை கேலிகுரியாக்கி விடும் என்ற காரணத்தால் உரையை முழுமையாக படிக்க இயலாமைக்கான விளக்கத்தை ஆளுநர் தெரிவித்தார். சட்டப்பேரவைக்கு தனது மரியாதையை வெளிப்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக இந்த பேரவைகூட்டத் தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்து தனது உரையை முடித்தார்

அதன் பிறகு ஆளுநரின் முழு உரையை சட்டப்பேரவை தலைவர் வாசித்தார். மாண்புமிகு ஆளுநர் உரை முடியும் வரை அமர்ந்திருந்தார்.

6) மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஆளுநரின் உரையை வாசித்து முடித்தவுடன், நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட படி, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்றார். அச்சமயம், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் ஆளுநருக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து மற்ற கருத்துகளோடு நாதுராம் கோட்சே பின்பற்றுபவர் என தெரிவித்தார். மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் தனது பொருத்தமற்ற நடவடிக்கையால் தனது பதவியின் கண்ணியத்தையும், சபையின் மாண்பையும் குறைத்துவிட்டார்.

மாண்புமிகு ஆளுநருக்கு எதிராக சட்டப் பேரவை தலைவர் தனது நீண்ட விமர்சனத்தை வெளிப்படுத்திய நிலையில், மாண்புமிகு ஆளுநர் தனது பதவியின் கண்ணியத்தையும் மற்றும் சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்

RAJ BHAVAN, TAMIL NADU PRESS RELEASE ON GOVERNOR'S ADDRESS AT TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY HELD TODAY (12.02.2024)

Following is the sequence of events at the Governor's Address in the Legislative Assembly, Tamil Nadu today on February 12, 2024:

1. The Draft Governor's address was received at the Raj Bhavan, from the Government, on 9.2.2024. The address had numerous passages with misleading claims far from truth.

2. Hon'ble Governor returned the file with following advice:

(a) To show due respect to the National Anthem and play it at the beginning and end of the Governor's address.In this regard, Governor had written letters to the Hon'ble Chief Minister and Hon'ble Speaker in the past also.

(b) Governor's address should reflect Government's achievements, policies and programmes and to inform the house of the "causes of its summons" and should not be a forum for peddling misleading statements and venting blatantly partisan political views.

3. The Government chose to ignore the advice of Hon'ble Governor.

4. Hon'ble Governor in his address to the House at 10:00 am today (February 12th, 2024) greeted the Hon'ble Speaker, the Hon'ble Chief Minister, the Members of the House and the people of Tamil Nadu, and read out the first paragraph which contained a Kural (738) of the renowned Saint Thiruvalluvar. Thereafter, Hon'ble Governor with due regard to the constitutional proprieties expressed his inability to read the address as it contained numerous passages with misleading claims and facts and reading them would have amounted to Governor's address becoming a constitutional travesty. He expressed his respect to the house, wished the session to be productive for the good of our people of Tamil Nadu and concluded.

5. Thereafter the Hon'ble Speaker read the Tamil version of the address. Hon'ble Governor sat through it till the conclusion of address.

6. When the Speaker concluded the address, the Hon'ble Governor rose for the National Anthem, as scheduled. However, the Hon'ble Speaker instead of following the schedule launched a tirade against the Governor and called him a follower of Nathuram Godse and more. The Hon'ble Speaker with his unbecoming conduct lowered the dignity of his chair and grace of the House.

While the Hon'ble Speaker went on his tirade against the Hon'ble Governor, The Hon'ble Governor with due regard to the dignity of his office and the House left the House.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback