Breaking News

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் ஜி.கே வாசன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ் - ஜி.கே.வாசன் அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தல் த.மா.கா கூட்டணிபற்றி ஜி.கே. வாசன் கூறியிருப்பதாவது:-

மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அளித்து பாஜக கூட்டணியில் இடம்பெறுகிறோம்

பாஜக மேலிடத் தலைவர்கள் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினார்கள்.

பாஜகவுடன் த.மா.கா கூட்டணி வைக்கிறேன்.என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறேன்

தமிழ்க் கலாசாரத்தை விரும்பும் அரசாக ஒன்றிய பாஜக அரசு உள்ளது. பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாடு பொருளாதார ரீதியாக மேலும் மேம்படும்

நாளை பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறேன் 

வாக்களித்த தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது ,தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற்று அனைத்தும் நிறைவுபெறும் என தெரிவித்துள்ளார்

2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி முடிவு - தலைவரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

ஜி.கே வாசன் அவர்களின் பேட்டி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/GK__Vasan/status/1761972292777828678

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback