Breaking News

சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் முழு விவரம்

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பி இருந்தார்

இந்நிலையில் இன்று 3-ம் நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை உதயகுமார் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

நேற்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை பரிசீலனை செய்யும்படி சபாநாயகரிடம் கேட்டு கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, சபாநாயகர் உத்தரவை அடுத்து சட்டப்பேரவை ஓபிஎஸ் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை மரபுப்படி எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஓதுக்கீடு 

எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக பரிசீலிக்க சபாநாயகருக்கு முதலமைச்சர் பரிந்துரை செய்திருந்த நிலையில் நடவடிக்கை

முன்னாள் முதலமைச்சர் ஒபிஎஸ் இருக்கை எண் 206ல் இருந்து 207க்கு மாற்றம் இருக்கை எண் 205 - ஈபிஎஸ், 206 - ஆர்.பி.உதயகுமார், 207 -ஒபிஎஸ்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback