சென்னை மெரினா கடற்கரையில் பஞ்சு மிட்டாய்கள் பறிமுதல் ஆய்வு நடத்த உத்தரவு
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் பஞ்சு மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ‘ரொடமின் பி’ எனும் வேதிப்பொருள் கலந்துள்ளதா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மாநிலம் முழுவதும் இவ்வகை பஞ்சு மிட்டாய்களை தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வு செய்யவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
புற்றுநோயை உருவாக்கும் ரோஸ் கல்ர் பஞ்சு மிட்டாய் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை
ரோஸ் நிறத்தில் விற்பனை செய்யப்படும் பஞ்சுமிட்டாய்களில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய தடை செய்யப்பட்ட நிறமி உபயோகிக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்
புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். இவ்வகை பஞ்சு மிட்டாயை விற்கும் 30க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை தேடி வருகின்றனர்.
இந்த ரோஸ் கலர் பஞ்சு மிட்டாயில் கார்சினோஜென் கெமிக்கல்கள் உள்ளது எனவும் இது புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல் ஆகும் எனவும் இந்த கெமிக்கல்கள் அடங்கிய புற்றுநோயை உருவாக்கும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள் , மேலும் இந்த பஞ்சுமிட்டாய்களை குழந்தைகளுக்கு வாங்கி தராதீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் பஞ்சு மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ‘ரொடமின் பி’ எனும் வேதிப்பொருள் கலந்துள்ளதா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மாநிலம் முழுவதும் இவ்வகை பஞ்சு மிட்டாய்களை தயாரிக்கும் ஆலைகளில் ஆய்வு செய்யவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வெளியிட்டுள்ள வீடியோ பார்க்க
https://twitter.com/sunnewstamil/status/1755108571229077769
நன்றி சன் நியூஸ்
Tags: தமிழக செய்திகள்
