Breaking News

செக் மோசடி வழக்கு பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது!

அட்மின் மீடியா
0

செக் மோசடி வழக்கு பிரபல தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன் காசோலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன், நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த படத்திற்காக ராஜ் டிவி நிறுவனத்தில் 1 கோடியே 70 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்திற்காக காசோலைகளை கொடுத்துள்ளார். ராஜ் டிவி நிறுவனம் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் சிவசக்தி பாண்டியன் பணத்தை கொடுக்காததால் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்துள்ளனர். 

மேலும் நீதிமன்றமும் பல தவணைகள் வழங்கியும் பணத்தை திருப்பித் தர முன்வராததால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இன்று நுங்கம்பாக்கம் காவல்துறையினர் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை அவரது இல்லத்தில் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback