Breaking News

தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு முழு விவரம்

இன்று முதல் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்



வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன் அறிவித்துள்ளார். 

பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என 14,000 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டத்தால், பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback