Breaking News

ஜாக்டோ - ஜியோ போரட்டம்:- அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது, கடும் நடவடிக்கை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!!

அட்மின் மீடியா
0

அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது, கடும் நடவடிக்கை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!!

அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ள தமிழக அரசு, 

ஊழியர்களின் வருகை பதிவு குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவித்த நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகி உள்ளது.

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback