Breaking News

மக்களவை தேர்தல் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே குஜராத்,டெல்லி,ஹரியானா,கோவாவில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு! முழு விவரம்

அட்மின் மீடியா
0
மக்களவை தேர்தல்காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே குஜராத்,டெல்லி,ஹரியானா,கோவாவில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு! முழு விவரம்

மக்களவை தேர்தல் கூட்டணி: காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது, அதன்படி  

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி - 24 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி  2 தொகுதிகளிலும் போட்டியிட உடன்பாடு ஆகியுள்ளது

அதே போல் டெல்லியில்  காங்கிரஸ்  கட்சி 3 தொகுதிகளிலும்; ஆம் ஆத்மி - 4 தொகுதிகளிலும் போட்டியிட உடன்பாடு ஆகியுள்ளது

ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி  9 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி- 1 இடத்திலும் போட்டியிட முடிவாகியுள்ளது

சண்டிகர் மாநிலத்தில் உள்ள  1 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியே  போட்டியிட முடிவாகியுள்ளது

மேலும் கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியே  போட்டியிட முடிவாகியுள்ளது

டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி புது டில்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி ஆகிய 4 தொகுதிகளில் போட்டி

காங்கிரஸூக்கு சாந்தினி சவுக், வட கிழக்கு டெல்லி, வட மேற்கு டெல்லி ஆகிய 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது

அதேபோல் 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிடும்  என உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் , சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தொகுதி பங்கீட்டை அறிவித்துள்ளார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback