அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது மருமகள் வரதட்சணை கேட்டு கொடுமை என புகார்
சோழிங்கநல்லூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி.கந்தன் மீது மருமகள் பரபரப்பு புகார்
சோழிங்கநல்லூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. பி. கந்தன், டார்ச்சர் செய்ததாக அவரது மருமகள் சுருதி ஆவடி காவல் ஆணையரகத்தில் கண்ணீர் மல்க வரதட்சணை புகார் அளித்துள்ளார். 2018இல் திருமணத்தின்போது 600 சவரன், கார் உள்ளிட்டவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. அது போதவில்லை என கடந்த 2 ஆண்டுகளாக 400 சவரன் கேட்டு மாமனார் கந்தன், கணவர் உள்ளிட்டோர் கொடுமைப்படுத்தியாக கே.பி.கந்தன் மீதும், அவரது மகன் கே.பி.கே.சதீஷ்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி பெண்ணின் தரப்பில் புகார்
சோழிங்கநல்லூர் தொகுதியில் 2011-ம் ஆண்டு கே .பி.கந்தன். அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது மகன் கே.பி.கே.சதீஷ்குமார் சென்னை பெருநகர மாநகராட்சி 182 வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
அம்பத்துரை சேர்ந்த ஸ்ரீ காந்த் என்பவரது மகள் மருத்துவராக இருக்கும் ஸ்ருதி பிரியதர்ஷினிக்கும், கே.பி.கே.சதீஷ்குமாருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சதீஷ்குமாரின் மனைவி ஸ்ருதி பிரியதர்ஷினி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை புகார் அளித்துள்ளார். அதில்
திருமணத்தின் போது 600 சவரன் தங்கம், 20 கிலோ வெள்ளி, சொகுசு கார்கள் வரதட்சணையாக கொடுத்தும் மேலும் 400 சவரன் தங்க நகைகள் கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் பெண் குழந்தையுடன் வீட்டை விட்டு துரத்தியதாகவும் கே.பி.கந்தன், அவரது மனைவி, மகன் கே.பி.கே.சதீஷ்குமார் மற்றும் மகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
