காஷ்மீரில் எங்கு பார்த்தாலும் கொட்டும் பனி தண்டவாளத்தில் செல்லும் ரயில் இணையதளத்தில் வைரல் ஆகும் வீடியோ
காஷ்மீரில் எங்கு பார்த்தாலும் கொட்டும் பனி தண்டவாளத்தில் செல்லும் ரயில் இணையதளத்தில் வைரல் ஆகும் வீடியோ
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா - பனிஹால் வழித்தடத்தில், முழுவதும் பனி படர்ந்த தண்டவாளத்தில் ரயில் செல்லும் காட்சி வைரல் ஆகின்றது
வட மாநிலங்களில் குளிர் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பரவலாக பனி கொட்டி வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு சென்று விட்டதால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. வைஷ்ணவ் தேவி கோயில், ஸ்ரீநகர், குல்மார்க், ஆகிய பகுதிகளில் சாலைகளில் பனி படர்ந்துள்ளது. காஷ்மீரில் நிலவும் கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும், தடங்கல் இன்றி, பாரமுல்லா – பனிஹால் இடையே இரயில் செல்லும் வீடியோ இனையத்தில் வைரல் ஆகின்ரது
காஷ்மீரின் பெரும்பாலான சுற்றுலா தல பகுதிகளில், திரும்பும் திசையெங்கும் வீடுகள், சாலைகள், வாகனங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/Self_Supporter_/status/1753035848008794115
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/JandKTourism/status/1753038953555632589
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/eglobalnews23/status/1752951786606936439
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
