அரசியல் பரபரப்பு - டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் முதலமைச்சர் கெஜ்ரிவால் முழு விவரம்
அரசியல் பரபரப்பு - டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் முதலமைச்சர் கெஜ்ரிவால் முழு விவரம்
டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார்.
மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 எம்எல்ஏக்கள் இருக்கும் பட்சத்திலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.அதன்படி, டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்துவிட்டு, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது,
பொய் வழக்குகள் பதிவு செய்து மற்ற மாநிலங்களில் கட்சிகள் உடைவதையும், அரசுகள் கவிழ்வதையும் பார்க்கிறோம். அதுபோன்று, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை மதுபான கொள்கை வழக்கில் கைது செய்ய நினைக்கிறார்கள்.
டெல்லி தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்று தெரிந்ததால் டெல்லி அரசை கவிழ்க்க நினைக்கிறார்கள். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை, அவர்கள் அனைவரும் அப்படியே இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த, நான் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்வைக்கிறேன் என்றுள்ளார்.
மேலும் ஒருமுறை பெரும்பான்மை நிரூபித்துவிட்டால், 6 மாதத்திற்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது
அதேபோல் மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 19ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
