சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட தனது உரையின் வீடியோவை வெளியிட்ட ஆளுநர்
சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட தனது உரையின் வீடியோவை வெளியிட்ட ஆளுநர் வீடியோ!
தமிழ்நாடு அரசின் இந்தாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு கூடியது.
2024 ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையானது ஆளுநரிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களை சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரிக்கப்பட்டதாக கூறி அவர் உரையை படிக்காமல் அமர்ந்தார். இதை தொடர்ந்து ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்து முடித்தார். இருப்பினும் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறினார்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட தனது உரையின் வீடியோவை ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் ஓரிரு நிமிடங்கள் உரையாற்றிய வீடியோவை சப்-டைட்டில் உடன் ஆளுநர் அவர்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/rajbhavan_tn/status/1756982347201990701
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
