Breaking News

போதிய பேருந்துகள் இல்லை நள்ளிரவில் ஜிஎஸ்டி சாலை மறியல் போராட்டம் நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

போதிய பேருந்துகள் இல்லை நள்ளிரவில் ஜிஎஸ்டி சாலை மறியல் போராட்டம் நடந்தது என்ன முழு விவரம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால், நள்ளிரவில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Kilambakkam Bus Terminus

பொதுவாக சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் வெள்ளிக்கிழமை பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்க்கு வந்த பயணிகள் அங்கிருந்து  தென் மாவட்டங்களுக்கு செல்ல போதுமான பேருந்துகள் கிடைக்கவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

திருச்சிக்கு செல்ல பேருந்துகள் கிடைக்கவில்லை என்றும் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணி வரை சுமார் 5 மணி நேரம் வரை பேருந்துக்கு காத்திருப்பதாகவும் பயணிகள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை மறித்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று திஉரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக முடங்கியது. சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மக்களை சமாதனப்படுத்து கூட்டத்தை கலைத்தனர்.

காரணம் என்ன:-

நாளை ஞாயிற்றுக்கிழமை தை மாதத்தில் வரக்கூடிய, கடைசி வளர்பிறை முகூர்த்தம் என்பதால் அதிக அளவு திருமணம் நாளை நடைபெற உள்ளது. இந்த திருமணங்களில் கலந்து கொள்வதற்காக, பல்வேறு ஊர்களுக்கு நேற்று சென்னையில் இருந்து கிளம்பு துவங்கியுள்ளனர், மேலும் விடுமுறை தினம் என இரண்டும் சேர்ந்து வந்ததால் பயணிகள் கூட்டம் அதிகமாக காரணமாக இருந்தது,

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback