கோயம்பேட்டில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கலாம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மறு உத்தரவு வரும் வரை கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை கோயம்பேட்டில் உள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் போக்குவரத்தால் கடும் நெரிசல் ஏற்படுகின்றது .இதனை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள ஊரப்பாகம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் மிக பிரம்மாண்ட பேருந்து நிலைய பணிகள் கடந்த 2019 ல் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது .தற்போது இந்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது, ECR, 2பேருந்து தவிர மற்ற அனைத்து அரசு பேருந்துகளும் அங்கிருந்து தான் புறப்பட்டு செல்கின்றது,
அதனை தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது
கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் வரும் வரை ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டில் இருந்துதான் புறப்படும் எனவும் ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் வர மக்கள் சிரமப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதையே இட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். எனவே ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தே இயக்குவோம் என ஆம்னி பேருந்து தரப்பில் தெரிவிக்கப்பட்டது
மேலும் தமிழக அரசு உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால் மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், போரூர் சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது.
அதேபோல் ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது’ என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
