Breaking News

பெற்ற குழந்தையை தொட்டிலுக்கு பதில் மைக்ரோவேவ் அவனில் வைத்த தாய் அடுத்து நடந்த கொடூரம் Baby dies after mother mistakes oven

அட்மின் மீடியா
0

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள கன்சஸ் நகரில் வசித்து வரும் மரிகா தாமஸ் இவருக்கு  வயது 26 ஆகும்

இவருக்கு ஒரு மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. அழுது கொண்டிருந்த குழந்தையை மரிகா தாமஸ் சமாதானம் செய்து தூங்க வைக்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்தார். குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து உணவை சூடுபடுத்த பயன்படும் மைக்ரோவேவ் ஓவனில் குழந்தையை வைத்துவிட்டார். 

image courtesy google


அவனில் குழந்தையின் ஆடை வெப்பத்தால் கருகி எரிந்து புகை வரவே  அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் வீட்டில் வந்து பார்க்கும் போது மைக்கோவேவ் அவனில் இருந்து புகை வருவதை கவனித்த அவர்கள் ஓவனில் படுகாயங்களுடன் இருந்த குழந்தையை மீட்டு பரிசோதித்தனர். ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையின் தாயான மரிகா தாமசை கைது செய்து சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மரிகா தாமஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து பெற்ற தாயே குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback