சென்னை Anna flyover,Nungambakkam & Sterling Road ஆகிய இடங்களில் 1 வாரத்திற்க்கு போக்குவரத்து மாற்றம் முழு விவரம் Traffic diversions due to Chennai Metro rail work
சென்னையில் மெட்ரோ கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் செய்யப்படுகிறது.
சென்னை Anna flyover,Nungambakkam & Sterling Road ஆகிய இடங்களில் 1 வாரத்திற்க்கு போக்குவரத்து மாற்றம் முழு விவரம் Traffic diversions due to Chennai Metro rail work
GCTP- CMRL பணியின் காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டேர்லிங் சாலையில் போக்குவரத்து மாற்றம் கீழ்கண்ட CMRL நிலையங்களில் கட்டுமான பணிக்காக 1 அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், 2 நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் 3 ஸ்டேர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் 11.02.2024 முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடேஸ் ரோடு உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமனி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கனவே உள்ளபடி). இந்த பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்.
இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம். (மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதை).
அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம். (எற்கனவே உள்ளபடி).
வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை ரோடு, G.N. செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) சென்று அடையலாம்.
மற்றபிற உட்பற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து அனுமதிக்கப்படும். மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி
