அம்பரம்பாளையம் ஆறு சம்மந்தமாக நடிகர் பாக்யராஜ் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது தமிழக அரசு விளக்கம் முழு விவரம் ambarampalayam river bhagyaraj
இந்த வீடியோ வைரல் ஆகி பல மீடியாக்கள் செய்தியாக அளித்துள்ளது, இந்நிலையில் அந்த வீடியோவில் பாக்யராஜ் அவர்கள் கூறியுள்ளது பொய் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது
வதந்தி:-
இயக்குநர் திரு. கே.பாக்யராஜ், ஒரு வீடியோவில், 'மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள அம்பரம்பாளையம் ஆற்றில் குளிக்க வருவோரை சிலர் ஆற்றில் மூழ்கடித்துக் கொல்வதாகவும், அவர்களின் உடல்களை மீட்க பணம் பெறுவதாகவும் கூறியுள்ளார்.
உண்மை என்ன?
கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பத்ரி நாராயணன் இ.கா.ப கூறுவதாவது:
•திரு.பாக்யராஜ் அவர்களின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதாகும். அதுபோன்ற குற்றச் சம்பவம் ஒன்றுகூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை.
•பத்ரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள ஆற்றுப் பகுதியில் 2022, 2023ல் எவ்வித உயிரிழப்பு சம்பவமும் நடக்கவே இல்லை”.
•வதந்தியை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயல்கள் ஆகும்.
தமிழக அரசு உண்மை சரிபார்க்கும் குழு அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/tn_factcheck/status/1757405041630015719
Tags: FACT CHECK
