Breaking News

மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் கட்சி நிர்வாகி பேஸ்புக் லைவில் சுட்டுக்கொலை வீடியோ வெளியீடு Abhishek Ghosalkar shot dead faceebook live

அட்மின் மீடியா
0

பேஸ்புக் லைவில் மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை வீடியோ வெளியீடு Abhishek Ghosalkar shot dead faceebook live

சிவசேனா (UBT) தலைவர் வினோத் கோசல்கரின் மகன் அபிஷேக் கோசல்கர், பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீம் செய்து கொண்டிருந்த போது, ​சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பேஸ்புக் லைவ் வீடியோ வெளியிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை தகிசர் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து சிவசேனா நிர்வாகி அபிஷேக் கோசல்கர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்

Abhishek Ghosalkar shot dead faceebook live


சிவசேனா கட்சியின் முன்னாள் கார்ப்பரேட்டரும், முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகனுமான அபிஷேக் கோசல்கர், மும்பையில் உள்ள தஹிசார் பகுதியில் வியாழக்கிழமை தனிப்பட்ட தகராறில் சுடப்பட்டார், இதில் அபிஷேக் கோசல்கர் மீது 3 தோட்டாக்கள் பட்டுள்ளது ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அபிஷேக் கோசல்கர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள், அவரை கொல்லும் வீடியோ பேஸ்புக் லைவ்வாக பதிவாகி உள்ளது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது.

அபிஷேக் கோசல்காருடன் பேஸ்புக் லைவ் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்த நபர்  திடீரென்று லைவ் வீடியோவில் வைத்தே அவரை சுட்டுக்கொன்றார். இதனை தொடர்ந்து அந்த நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அபிஷேக் கோசல்கரை சுட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் மோரிஸ் நோரோன்ஹோ என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் பேஸ்புக்கில் நேரலையில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதுஇருவரும் பேஸ்புக் லைவில் பேசி முடிந்ததும், மோரிஸ் அபிஷேக் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்னர், மோரிஸ் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார், அபிஷேக் மற்றும் மோரிஸ் இடையே கடந்த காலத்தில் தகராறு இருந்தது குறிப்பிடத்தக்கது

அந்த வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/INCMumbai/status/1755646937565720653

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback