உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் (95) உயிரிழந்தார் முழு விவரம் Fali S Nariman Passes Away
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் (95) உயிரிழந்தார் முழு விவரம்
பிரபல சட்ட நிபுணரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் (95) காலமானார்!
வயது முதிர்வு காரணமாக பலி நாரிமன் தனது 95வது வயதில் இன்று காலமானார். டெல்லியில் உள்ள நாரிமனின் வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. நாரிமனின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற நியமன உறுப்பினராக இருந்த பாலி நரிமன் பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார்; இந்தியாவின் தலைசிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர்களில் ஒருவராக அறியப்பட்டவர் பாலி நரிமன், சர்வதேச வர்த்தக தீர்ப்பாயத்தின் துணைத் தலைவராகவும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராகவும் இருந்துள்ளார்.
நாரிமன் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார்.
22 ஆண்டுகள் பயிற்சி செய்த பிறகு, அவர் 1971 இல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார் இவரின் மகன் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: இந்திய செய்திகள்
