Breaking News

உத்தரபிரதேச வங்கியில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.8.54 லட்சம் கொள்ளையடித்த வீடியோ இணையத்தில் வைரல் gonda bank robbery video

அட்மின் மீடியா
0

உத்தர பிரதேசத்தில் கிராம வங்கி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி ரூ.8.54 லட்சம் கொள்ளையடித்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரல்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா மாவட்டத்தில் உள்ள கிராம வங்கியில் ரூ.8.54 லட்சத்தை கொள்ளையடித்த நபர், சில மணி நேரங்களுக்குப் பிறகு போலீஸாரால் என்கவுன்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டு பணத்தையும் மீட்டுள்ளார்கள்.

உத்தர பிரதேசத்தில் வங்கிக்குள் ஹெல்மெட்டுடன் சென்ற மர்ம நபர், காசாளர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, 8.54 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றார்.

உத்தர பிரதேசத்தில் கோண்டா நகரில் இயங்கும் தனியார் வங்கிக்குள் காசாளர் இருக்கும் அறைக்குள் சென்ற அவர் காசாளர் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினார்.இதனால் அச்சமடைந்த பெண் காசாளர், அங்கு அறையில் வைத்திருந்த 8.54 லட்சம் ரூபாயை அந்த மர்ம நபர் கொடுத்த பையில் போட்டுள்ளார்.

பணத்தை கொள்ளையடித்த பின் அந்த மர்ம நபர் தலைமறைவானார். இச்சம்பவம் குறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க, தனிப்படை அமைத்த போலீசார் சோதனையை பலப்படுத்தினார்கள்

வெள்ளிக்கிழமை இரவு மொகல்பூர் சாலையில் போலீஸ் சோதனையின் போது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த ராகேஷ் குப்தாவை நிறுத்துமாறு சைகை காட்டினார், ஆனால் அவர் போலீஸ் குழுவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். 

தற்காப்புக்காக போலீசார் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளியின் வலது காலில் சுடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவரை சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், கூரிய ஆயுதம் (அரிவாள்) மற்றும் 8.54 இலட்சம் ரூபாயும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண் காசாளரை கத்தியை காட்டி மிரட்டி  ரூ. 8.54 லட்சம் பணத்துடன் தப்பி சென்ற அந்த கொள்ளை வீடியோ வங்கி கேமராவில் பதிவாகியுள்ளது, இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/HateDetectors/status/1753660503770190128

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback