Breaking News

சென்னையில் இருந்து ஹைதரபாத் சென்ற பேருந்து மீது லாரி மோதி விபத்து 8 பேர் உயிரிழப்பு மீட்பு பணி வீடியோ முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னையில் இருந்து ஹைதரபாத் சென்ற பேருந்து மீது லாரி மோதி விபத்து 8 பேர் உயிரிழப்பு  மீட்பு பணி வீடியோ முழு விவரம்

நெல்லூர் அருகே தனியார் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்த சோகம். 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி 

சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்றுகொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இன்று சனிக்கிழமை அதிகாலை நெல்லூர் அருகே உள்ள காவலி பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். காயம் அடைந்த 18 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் ஹைதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் ஒரு லாரி மற்றொரு லாரி மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளது. அந்த சமயம் அந்த பகுதியில் வந்த லாரி இந்த லாரி மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் லாரியை வேறு பக்கம் திருப்பி உள்ளார்.அப்போது, எதிரே சென்னையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டு இருந்த சுற்றுலா பேருந்தின் மீது லாரி வேகமாக மோதி விபத்து ஏற்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன

சம்பவம் குறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இந்த விபத்தில் காயமடைந்த 18 பேரையும் உடனடியாக மீட்டு நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

உயிரிழந்த எட்டு பேரின் உடல்களும் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டு தற்போது நெல்லூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த கோர விபத்து குறித்து சென்னையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் நேரில் வந்து அடையாளம் காட்டிய பின்னர் தான் உயிரிழந்தவர்களின் விவரம் பற்றி முழு விவரம் தெரியவரும் எனககூறப்படுகிறது.


https://twitter.com/sudhakarudumula/status/1756138779902189803

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback