Breaking News

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை

அட்மின் மீடியா
0

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். 

இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உயிரிழந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக முகமது அசாருதீன், அப்சர் கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் என ஆறு பேரை கைது செய்தனர். இந்த வழக்கு என்.ஐ.ஏவிற்கு மாற்றப்பட்டு கைது செய்யப்பட்ட ஆறு பேரும் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை, நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெறுகிறது. கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback