ஊட்டியில் தனியார் குடியிருப்பு பகுதியில் கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து விழுந்து விபத்து 6 பேர் பலி முழு
ஊட்டியில் கட்டுமான பணிகளின் போது மண் சரிந்து விழுந்து 6 பெண்கள் உயிரிழந்தனர்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் கட்டுமான பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதில் 6 பேர் பெண்கள், என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் உள்ள காந்திநகர் பகுதியில் புதிய வீட்டிற்க்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. அதில் கழிவறை அமைக்கும் பணியில் கட்டுமான பணியாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கழிவுறைக்காக தோண்டப்பட்ட குழியின் அருகே மண் சரிவு ஏற்பட்டு பணியாளர்கள் மீது விழுந்தது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மண்சரிவில் சிக்கியிருந்த 8 பேரையும் மீட்டனர். இருப்பினும் இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட மூன்று பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் திருமதி.ராதா (வயது 38), திருமதி.பாக்கியம் (வயது 36), திருமதி.முத்துலட்சமி (வயது 36), திருமதி.உமா (வயது 35) திருமதி.சங்கீதா (வயது 30) மற்றும் திருமதி.சகிலா (வயது 30) ஆகிய ஆறு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
மேலும் திருமதி.ஜெயந்தி (வயது 56), திருமதி.சாந்தி (வயது 45), திரு தாமஸ் (வயது 24) மற்றும் திரு.மகேஷ் (வயது 23) ஆகிய நான்கு நபர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்இந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
