பெட்ரோலுக்கு தமிழ்நாடு அரசு ரூ.54 வரி விதிக்கிறது என்பது வதந்தி - தமிழக அரசு விளக்கம் Petrol Price fake news
மத்திய அரசு வரி ரூ.16, தமிழக அரசு வரி ரூ.54; பெட்ரோல் பங்க்ல போர்டு வைக்க தமிழக அரசுக்கு தைரியம் இருக்கா?பாஜக KP..ராமலிங்கம் கேள்வி ...என ஒர் வீடியோ சமூக வலைதளங்களங்களில் பரவி வருகின்றது இந்நிலையில் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெட்ரோலுக்கு தமிழ்நாடு அரசு ரூ.54 வரி விதிக்கிறது' என்பது வதந்தியே என தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
வதந்தி:-
பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கே.பி.இராமலிங்கம், "பெட்ரோலுக்கு தமிழ்நாடு அரசு ரூ.54 வரி விதிக்கிறது. ஒன்றிய அரசு ரூ.16 மட்டுமே வரி விதிக்கிறது” என பேசிய காணொளி பரவி வருகிறது.
உண்மை என்ன?
• கே.பி.இராமலிங்கம் கடந்த 2022 ஆம் ஆண்டு பேசிய காணொளிதான் தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அந்தக் காணொளியில் அவர் பேசியது முற்றிலும் பொய்யானதாகும். 9
• பெட்ரோல், டீசலின் அடிப்படை விலை, கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப மாறுபடும். விலை உயரும் போது அடிப்படை விலை, ஒன்றிய அரசின் கலால் வரி ஆகியவற்றுடன் மாநில அரசின் வாட் வரியின் சதவீதத்திற்கேற்ப விற்பனை விலை மாறுபடும். ஒவ்வொரு மாநில அரசும் குறிப்பிட்ட அளவு வாட் வரி விதிக்கின்றன.
• புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோலுக்கு ரூ.3 குறைத்து 2021 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. அதன் பிறகு மாநில அரசு வரியில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை.
• கே.பி.இராமலிங்கம் பேசிய 2022 ஏப்ரல் காலகட்டத்தில் ஒன்றிய அரசு பெட்ரோலுக்கு கலால் வரியாக ரூ. 27.9 விதித்துள்ளது. அப்போதைய தமிழ்நாடு அரசின் வரி ரூ.22.54 (13%+11.52 ரூ/லி) விட இது அதிகமாகும்.
தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும் :-
https://twitter.com/tn_factcheck/status/1757710369735495835
Tags: தமிழக செய்திகள் FACT CHECK
