Breaking News

ரூ.500 சிலிண்டர் திட்டத்தை தொடங்கி வைத்தார் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி முழு விவரம்

அட்மின் மீடியா
0

ரூ.500 சிலிண்டர் திட்டத்தை தொடங்கி வைத்தார் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி முழு விவரம்

தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ரேவந்த் ரெட்டி முதல்வரானார்.

தேர்தலின்போது, ‘மகாலட்சுமி திட்டம்’ எனும் பெயரில் 6 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி மக்கள் முன் வைத்தது. இதில், ஏற்கனவே, பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டமும்,ஏழைகளுக்கு கார்ப்பரேட் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை ராஜீவ் ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தில் இலவச மருத்துவ சேவை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடக்கி வைத்தார்.

இந்நிலையில் நேற்று தலைமை செயலகத்திலேயே முதல்வர் ரேவந்த் ரெட்டி, ரூ.500க்கு காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தையும், 200 யூனிட் வரை ஏழை களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

தெலங்கானாவில் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 200 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் ₹500 சிலிண்டர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

அனைத்து வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும் என்றும், மகாலட்சுமி திட்டத்தின் மூலம் மொத்தம் 40 லட்சம் குடும்பங்கள் இதில் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார்.

Give Us Your Feedback