5 இஸ்லாமியர்கள் உட்பட 12 சிறைவாசிகள் விடுதலை - ஆளுநர் ஒப்புதல் முழு விவரம்
5 இஸ்லாமியர்கள் உட்பட 12 சிறைவாசிகள் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் முழு விவரம்
தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று நீண்ட கால சிறைவாசிகள் 12 பேரை சிறையில் இருந்து விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்தாண்டு பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி, ஆயுள் தண்டனை கைதிகள் 12 பேரை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்து இருந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் இந்த பரிந்துரையை தற்போது ஆளுநர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளார்
அதன்படி கடலூர், கோவை, வேலூர், புழல் ஆகிய சிறைகளில் இருந்து மொத்தம் 12 சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் சிறையில் நீண்ட காலமாக உள்ள செல்வராஜ், சேகர், பெரியண்ணன், உத்திரவேல் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கோவையிலிருந்து ஆறு சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பூரி கமல், விஜயன், அபுதாஹிர், ஹாரூன் பாட்ஷா, சாகுல் ஹமீது உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் சிறையில் இருந்து ஸ்ரீனிவாசன் என்பவரும், புழல் சிறையில் இருந்து ஜாகீர் என மொத்தம் 12 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதில் அபுதாஹிர், ஹாரூன் பாஷா,ஷாகுல் ஹமீத்,குண்டு ஜாஹிர், உமைல் பாபு ஆகி ஆகிய 5 இஸ்லாமிய சிறைவாசிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழக அமைச்சரவை தீர்மானத்திற்கு ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார்.
நல்லெண்ண அடிப்படையில் நீண்ட கால சிறைவாசிகள் 12 பேர் விடுதலை செய்ய செய்ய தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள் மார்க்க செய்தி

