Breaking News

பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து முழு விவரம்

அட்மின் மீடியா
0

பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து முழு விவரம்

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பிப்ரவரி 18ஆம் தேதியான நாளை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே  காலை முதல் பிற்பகல் வரை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நாளை காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி சென்னை கடற்கரை – தாம்பரம், கடற்கரை – செங்கல்பட்டு, தாம்பரம் – கடற்கரை, செங்கல்பட்டு – கடற்கரை, காஞ்சீபுரம் – கடற்கரை, திருமால்பூர் – கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. நாளை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படாது.





தாம்பரம் – சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கபடும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

 



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback