Breaking News

சென்னையில் சாதி விட்டு சாதி மாறி கல்யாணம்..ஆத்திரத்தில் தங்கையின் கணவரை கொடூரமாக கொன்ற அண்ணன் 4 பேர் கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னையில் சாதி விட்டு சாதி மாறி கல்யாணம்..ஆத்திரத்தில் தங்கையின் கணவரை கொடூரமாக கொன்ற அண்ணன் 4 பேர் கைது முழு விவரம்



சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரவீன் (26). தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கும், ஜல்லடம்பேட்டை பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. 

பின்னர் இருவரும் பள்ளிக்கரணை பகுதியில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.ஷர்மி வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்தது பெண் வீட்டாருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஷர்மியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் நேற்று இரவு பிரவீன் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் குடிக்க சென்றார். பின்னர் குடித்துவிட்டு வெளியே வந்த பிரவீனை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்

சம்பவம் அறிந்து வந்த போலீசார் அங்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரவீனை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவீன் இரவு உயிரிழந்தார். 

இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலையான பிரவீன்முதற்கட்ட விசாரணையில், பிரவீன் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் தினேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரவீனை கொன்றுவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. 

இதையடுத்து தனிப்படை அமைத்து தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த பெண்ணின் அண்ணன் தினேஷ் , மற்றும் அவரது கூட்டாளிகளான ஸ்டிபன்குமார்,ஜோதிலிங்கம்,ஸ்ரீ ராம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback