உத்தரகாண்டில் மதரசா இடிக்கப்பட்டதால் வன்முறை 4 பேர் பலி - ஊரடங்கு உத்தரவு கண்டதும் சுட உத்தரவு நடந்தது என்ன முழு விவரம் madrasa demolition in uttarakhand violence
உத்தரகாண்டில் மதரசா இடிக்கப்பட்டதால் வன்முறை 4 பேர் பலி - ஊரடங்கு உத்தரவு கண்டதும் சுட உத்தரவு நடந்தது என்ன முழு விவரம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளது என்று கூறி மதரசா மற்றும் மசூதியை மாநகராட்சி அதிகாரிகள் இடித்ததற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாநகராட்சி வாகனங்கள் மீது கற்களை வீசியும் வாகனங்களுக்கு தீவைக்கும் சம்பவங்கள் நடப்பதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தரகாண்டில் நாட்டிலேயே முதல் முறையாக பொதுசிவில் சட்ட மசோதா அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹர்த்வானியில் உள்ள வான்புல்புரா பகுதியில் மதராசா மற்றும் அதையொட்டி கட்டப்பட்ட மசூதியும் முறைகேடாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நீதிமன்றம் உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் அந்த கட்டடத்தை இடிக்க முடிவு செய்தனர்.
கட்டடங்களை இடிப்பதற்காக அதிகாரிகள் போலீஸார் நேற்று அங்கு சென்று புல்டோசர் மூலம் இடிக்க முயன்றபோது, அங்குள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது
இதனால் வன்முறை வெடித்தது. இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியுள்ளனர்
இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வன்முறையாளர்களை கண்டதும் சுடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன
https://twitter.com/MithilaWaala/status/1755582977428308099
இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/Angryman_J/status/1755646156292378791
இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/TricolourFirst/status/1755663134105497781
இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/Saffronloverr/status/1755643693590343911
இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/SheetalPronamo/status/1755647722542297490
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்தி வைரல் வீடியோ


