Breaking News

கன்னியாகுமரி அருகே கோர விபத்து 3 கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்ட பைக்... காரின் அடியில் சிக்கிய சிறுவன்! தீப்பிடித்து பலி அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

கன்னியாகுமரி அருகே கோர விபத்து 3 கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்ட பைக்... காரின் அடியில் சிக்கிய சிறுவன்! அதிர்ச்சி வீடியோ


கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த சிறுவன் காரின் முன்பகுதியில் சிக்கி, தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்தவர் கோபி (39). பெயிண்ட் கடை ஒன்றை நடத்தி வரும் கோபி, ஞாயிறு விடுமுறை என்பதால், தனது குடும்பத்தினருடன் காரில் சங்குத்துறை கடற்கரைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது கார் ஈத்தாமொழி செம்பொன்கரை பகுதியில் வந்த போது காரின் முன்னால் சென்ற பைக் மீது பயங்கரமாக மோதியுள்ளது. 

கார் மீது பைக் மோதிய வேகத்தில் காரின் முன் பகுதியில் பைக் ஓட்டிவந்தநபரும் பைக்கும் சிக்கிகொண்டது ஆனாலும் கோபி காரை வேகமாக ஓட்டியுள்ளார்.

இதனை நேரில் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் காரை நிறுத்துமாறு கத்தி கூச்சலிட்டனர். மேலும் இளைஞர்கள் காரை நிறுத்துமாறு பைக்கில் வேகமாக பின்தொடர்ந்தனர். சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை இவ்வாறு கார் பயணித்துள்ளது ஆனால் அதற்குள் கார் சங்குத்துறை பீச்சிற்கு வந்தது .அப்போது காரின் முன்பகுதி திடீரென தீ பிடித்து எரிந்தது.

காரின் முன்பக்கம் திடீரென தீப்பிடித்ததால் கோபியும் அவரது குடும்பத்தினரும் காரை நிறுத்துவிட்டு கீழிறங்கி ஓடியுள்ளனர். 

இது பற்றி தகவல் அறிந்த போலீசார், நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர்.ஆனால் அதற்குள் சிறுவன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காரும் பைக்கும் மோதிய வேகத்தில் சிறுவன், காரின் அடியில் சிக்கியுள்ளான். பின்னர் கார் தரதர என சுமார் மூன்று கிலோமீட்டர் இழுத்துச் சென்றுள்ளது. 

பைக்கில் பயணித்தது, சூரங்குடி பள்ளித்தெருவைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவரது மகன் அஜாஸ் (15) என்பதும் சுண்டபற்றிவிளை பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவந்துள்ளார் என்றும் தெரிய வந்தது

இதையடுத்து, அஜாஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் காரை ஓட்டிய பெயிண்ட் கடை உரிமையாளர் கோபியை சுசீந்திரம் போலீசார் கைது செய்து, விசாரித்த நிலையில்அவர் மீது தெரிந்தே விபத்தை ஏற்படுத்தியது என 304(2) வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ருகின்றனர்.இந்நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/Paulvarnan96280/status/1756689870825697537

வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/Autokabeer/status/1757024379332944380/video/1

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback