Breaking News

பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அட்மின் மீடியா
0

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது அதில்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது

மேலும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பூர்ணிமா தீர்ப்பு வழங்கியுள்ளார்!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை மற்றும் ₹20,500 அபராதம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது. 


இந்நிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கியது விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் அதில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது

2021ஆம் ஆண்டு முதலமைச்சரின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த பெண் அதிகாரி புகார் அளித்திருந்தார்,

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன்பின்னர் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி, கண்ணன் உள்ளிட்டோர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் 
 
இவ்வழக்கில் 68 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது .அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி விழுப்புரம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியும் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 

அதில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார் 

அத்துடன் அவருக்கு உடனடியாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ரூபாய் 500 அபராதமும் விதிக்கப்பட்டது

இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார்

அதில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback