இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்ட மைவி3 ஏட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தன் முழு விவரம்
கோவையை தலைமையிடமாக கொண்டு மைவி3 ஏட்ஸ் என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும் யூ டியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டது இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதா மாதம் பணம் வழங்கி வருகிறது.
இதனிடையே மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இருந்து MLM நிறுவனத்துக்கு ஆதரவாக கோவை நீலாம்பூர் எல்&டி பைபாஸ் பகுதியில் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு ஆதரவு அளித்தார்கள்
இந்நிலையில் நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு 70க்கும் மேற்பட்டோருடன் மைவி3 ஆட்ஸ் உரிமையாளர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தன் நிறுவனம் குறித்தும் அவதூறு கருத்து பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி புகார் அளிக்க அவர் வந்ததாக தெரிவித்தார்
தனது நிறுவனத்தின்மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட முயன்றதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்
காவல் துறையினர் அவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும், கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். இதனிடையே சக்தி ஆனந்த் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது அமைதிக்கு ஏதிராக குற்றம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் சாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சக்தி ஆனந்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து சக்தி ஆனந்த் இரவோடு இரவாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சக்தி ஆனந்த் கைது செய்யப்பட்ட நிலையில் மைவி 3 ஏட்ஸ் செயலி முடங்கியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்

