Breaking News

அஸ்திவாரம் தோண்டும் போது சரிந்து விழுந்த 3 மாடி கட்டடம் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

அஸ்திவாரம் தோண்டும் போது சரிந்து விழுந்த 3 மாடி கட்டடம் வைரல் வீடியோ

ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டம் டோர்னல் பகுதியில் உள்ள ஸ்ரீசைலம் சாலையில் உள்ள மூண்ரு மாடி வாசவி லாட்ஜ் கட்டிடம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சரிந்து விழுந்தது. 

கட்டிடம் அருகில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக வாசவி லாட்ஜ் அருகே அஸ்திவராம் தோண்டப்பட்டது. இதனால், விடுதியில் விரிசல் ஏற்பட்டது. காலையில், கட்டடம் ஒருபுறம் சாய்ந்திருப்பதை நிர்வாகம் கவனித்தது. அதில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது

உடனே லாட்ஜ் ஊழியர்கள் உள்ளே இருந்தவர்களை வெளியேற்றினர். இதனால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. திடீரென கட்டிடம் பக்கவாட்டில் விழுந்ததால் அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  கட்டடம் இடிந்து விழுந்ததால், அப்பகுதி மக்கள் அனைவரும் அச்சமடைந்தனர். உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=MQfRzBu4GCI

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback