மார்ச் 3 ம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் Polio campaign 2024
போலியோவை ஒழிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகின்றது
இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் என மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது, எனவே தாய்மார்கள் மார்ச் 3 ம்தேதி அன்று உங்கள் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது. மார்ச் 3ம் தேதி இந்த முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என சிறப்பு மையங்களில் முகாம் நடைபெறும். இம்மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன.
சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட சுகாதாத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags: தமிழக செய்திகள்