கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு kovai sharmila
கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு
கடந்த 2ம் தேதி சத்திரோடு சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து எஸ்.ஐ., ராஜேஸ்வரி பணியில் இருந்து போது, ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை எஸ்.ஐ. கேட்டபோது வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷர்மிளா, தனியார் பேருந்தை இயக்கியதை தொடர்ந்து கோவையின் முதல் பேருந்து ஓட்டுநர் என சமூகவலைதளங்கள் மூலம் பிரபலமானார்.
இந்த நிலையில் சர்மிளா கடந்த பிப்.2 ஆம் தேதி சத்தியமங்கலம் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த போது சங்கனூர் சந்திப்பில் பணியில் இருந்த C1 காவல் நிலைய போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி, காரில் வந்த ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஷர்மிளா உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரியை வீடியோ எடுத்து, உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி லஞ்சம் கேட்பதாகவும், இது தொடர்பாக உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் IPC 506(i), 509, 66C தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஷர்மிளா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.instagram.com/ridersharmila4360/?hl=en
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ
