Breaking News

அனுமதியற்ற மனைப்பிரிவு, மனைகளை வரன்முறைப்படுத்த 29.02.2024 கடைசி நாள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

அனுமதியற்ற மனைப்பிரிவு, மனைகளை வரன்முறைப்படுத்த 29.02.2024  கடைசி நாள் முழு விவரம்

அனுமதியற்ற மனைப்பிரிவு, மனைகளை வரன்முறைப்படுத்த  பிப்.29-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது


அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப் படுத்தும் திட்டத்தின் கீழ், கடந்த 2016 அக்.20-ம் தேதி அல்லது அதற்கு முன் பதியப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப் படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. 

இவற்றில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் வரும் 2024பிப்.29-ம் தேதி வரை விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு செய்து, கடந்த செப்.4-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவுசெய்யலாம். எஞ்சிய அனுமதியற்றமனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ளக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அனுமதியற்ற மற்றும் வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த. ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, 04.09.2023 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் OT COT இதன்மூலம் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொண்டு 29.02.2024 விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback