Breaking News

பேடிஎம் ஆப் பிப்.29-க்குப் பிறகு செயல்படுமா? பண பரிவர்த்தனை செய்யமுடியுமா? உங்கள் சந்தேகங்கள் அதற்க்கான பதில் முழு விவரம்

அட்மின் மீடியா
0

பேடிஎம் ஆப் பிப்.29-க்குப் பிறகு செயல்படுமா? பண பரிவர்த்தனை செய்யலாமா? உங்கள் சந்தேகங்கள் அதற்க்கான பதில் முழு விவரம்

பிப்.29ம் தேதிக்கு பிறகு PAYTM BANKன் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என அந்நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவு! 

Paytm நிறுவனம் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வருவதால் பிப்.29ம் தேதிக்கு பிறகு PAYTM BANKன் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் எனவும் பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் தவிர 'வேறு எந்த ‘வங்கி' செயல்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது

யுபிஐ மற்றும் வங்கி சேவைகள் வழங்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு பிப்.29 முதல் புதிய வைப்பு நிதி பெறவோ, கடன் பரிவர்த்தனை மேற்கொள்ளவோ இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

மேலும் புதிதாக டெபாசிட் மற்றும் டாப்-அப் பணம் பெறுவதோ கூடாது. வாடிக்கையாளர்களிடம் இருந்து வாலட்களில் பணம் பெறுவதோ, பாஸ்ட்டேக், என்.சி.எம்.சி. கார்டு மூலம் பணம் பெறுவதோ கூடாது. வாடிக்கையாளர்கள் தமது சேமிப்பு வங்கிக் கணக்கு, நடப்பு கணக்கு, பாஸ்ட்டேக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க தடை விதிக்கக் கூடாது எனவும்

வாலட்களில் ஏற்கனவே உள்ள பணத்தை வாடிக்கையாளர் பயன்படுத்த தடையில்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது இந்த தடை பிப்.29 முதல் அமலுக்கு வருகிறது.

ரிசர்வ் வெளியிட்டுள்ள அறிவிப்பு பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்

பிப்ரவரி 29க்குப் பிறகு Paytm ஆப் வேலை செய்யுமா?

இந்த கேள்விக்கு Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா பதில் அளித்துள்ளார்

அதில் இம்மாதம் 29 க்குப் பிறகும் பே-டிஎம் "வழக்கம் போல்" செயல்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.பே-டிம் செயலியானது அதன் பேமென்ட் வங்கியுடன் மற்ற சில வங்கிகளுடன் இணைந்து செயல்படுகிறது. அதன்படி பேமென்ட் வங்கியுடனான சேவையை தவிர்த்து மற்ற வங்கிகளின் சேவைகளை பேடிஎம் தொடர்ந்து வழங்கும்.

பிப்ரவரி 29க்குப் பிறகு Paytm UPI  பயன்படுத்தலாமா?

பயனரின் UPI முகவரி Paytm Payments வங்கியுடன் இணைக்கப்பட்டிருந்தால், பிப்ரவரி 29க்குப் பிறகு பரிவர்த்தனைகள் கட்டுப்படுத்தப்படும். இருப்பினும், பிற வங்கிகளுடன் இணைக்கப்பட்ட UPI முகவரிகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள் பிப்ரவரி 29க்குப் பிறகு பரிவர்த்தனைகளைத் தொடரலாம்.

Paytm FASTag வேலை செய்யுமா?

FASTag போன்ற சில தயாரிப்புகள் ஏற்கனவே பிற வங்கிகளால் விநியோகிக்கப்பட்டுள்ளன. பே-டிஎம் பேமன்ட் வங்கி தவிர்த்து மற்றவற்றுடன் இணைக்கப்பட்ட ஃபாஸ்டேக் வழக்கம் போல் செயல்படும் என தெரிவித்துள்ளார்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

https://twitter.com/Paytm

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback