சிறுவர்கள் கார், பைக் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.26,000 அபராதம் ஒருவருடம் பதிவு சான்று ரத்து முழு விவரம்
அட்மின் மீடியா
0
சிறுவர்கள் கார், பைக் ஓட்டியதால் பெற்றோருக்கு ரூ.26,000 அபராதம் ஒருவருடம் பதிவு சான்று ரத்து முழு விவரம்
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைக்குகளை வழங்குவது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் குற்றமான செயல் ஆகும்,
சிறுவர்கள் கார், மோட்டார் சைக்கிள் ஓட்டி பிடிப்பட்டால் வாகனத்தின் உரிமையாளருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனத்தின் பதிவு சான்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்வாகனத்தை ஒரு வருடத்துக்கு ஓட்ட முடியாது.
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைக்குகளை வழங்குவது மோட்டார் வாகன
சட்டத்தின் கீழ் குற்றம். ஆனாலும் மீறுபவர்கள் பொதுவாக அபராதத்துடன்
விடுவிக்கப்பட்டனர். இனிமேல் அப்படி இல்லாமல் அபராதத்துடன் வாகனத்தை
இயக்குவதற்கு தடையும் விதிக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிவேகமாகவும்
கவனக்குறைவாகவும் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவதாக
புகார் எழுந்த நிலையில்
இதை தடுக்க சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டினால்
அவர்களது பெற்றோர் மீது வழக்கு பதிய மாவட்ட எஸ்பி அரவிந்த் உத்தரவிட்டார்.
இதையடுத்து காரைக்குடியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய சிறுவரின் பெற்றோர்
மீது காரைக்குடி போலீஸார் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கில் காரைக்குடி
குற்றவியல் நீதித்துறை நடுவர் சிறுவரின் பெற்றோருக்கு ரூ.26,000 அபராதம்
விதித்ததோடு, சிறுவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் பதிவை ஓராண்டுக்கு
நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
மேலும் மைனர் இருசக்கர வாகனத்தை இயக்குவதற்காக கொடுத்துள்ள குற்றமானது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இந்நீதிமன்றம் ரூ.26,000/- அபராதமும் மற்றும் 12 மாத காலத்திற்கு இந்த இரு சக்கர வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைக்கவேண்டும்என உத்தரவிட்டுள்ளார்
சிறுவர்களிடம் வாகனங்கள் வழங்கினால் பெற்றோர்கள் மீது
மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199 -Aன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு
நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்
