Breaking News

நல்லதரமான அரிசி கிலோ 25 மட்டுமே அடுத்த வாரம் முதல் பாரத் அரிசி முழு விவரம் Bharat rice

அட்மின் மீடியா
0

Bharat rice அரிசி விலைவாசி உயர்வினால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 25 ரூபாயில் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம் அடுத்த வாரத்தில் அமல் படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது


அதிகரித்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த  Bharat rice திட்டத்தை துவங்க உள்ளது மத்திய அரசு 

அதன்படி பாரத் என்ற பிராண்ட் பெயரில் நல்ல தரமான அரிசியை கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (Nafed), இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மூலம் ரூ.25க்கு அரிசியை விற்பனை செய்யவுள்ளது.

ஏற்கனவே பாரத் அட்டா வை கிலோ ஒன்றுக்கு 27.50 ரூபாய்க்கும் பாரத் தால் என பருப்புகளை 60 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் அடுத்தவாரம் முதல் 5 மற்றும் 10 கிலோ பைகளில் பாரத் அரிசி விற்பனை செய்ய தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback