பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 25 ம் தேதி 44 மின்சார ரயில்கள் ரத்து முழு விவரம்
3வது வாரமாக பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம் - கடற்கரை இடையே நாளை மறுநாள் (பிப்.25) 44 புறநகர் ரயில்கள் ரத்து..
பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 25 ம் தேதி 44 மின்சார ரயில்கள் ரத்து முழு விவரம்
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் பிப்.25ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை 44 புறநகர் ரயில் சேவை ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக 25 ஆம் தேதி சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே காலை முதல் பிற்பகல் வரை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி காலை 10 மணி முதல் மதியம் 4.30 மணி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி சென்னை கடற்கரை – தாம்பரம், கடற்கரை – செங்கல்பட்டு, தாம்பரம் – கடற்கரை, செங்கல்பட்டு – கடற்கரை, காஞ்சீபுரம் – கடற்கரை, திருமால்பூர் – கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. நாளை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படாது.
Tags: தமிழக செய்திகள்
