Breaking News

24 மணி நேரத்தில் ஏ.வி.ராஜூ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை த்ரிஷா வக்கில் நோட்டீஸ் actress trisha

அட்மின் மீடியா
0

24 மணி நேரத்தில் ஏ.வி.ராஜூ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை த்ரிஷா வக்கில் நோட்டீஸ்


சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளராக ஏ.வி.ராஜு இருந்தார். இவர் சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளரான சேலம் நகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். 

இதையடுத்து, அ.தி.மு.க., தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கியது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.வி.ராஜூ, கூவத்தூரில் நடந்த சம்பவம் குறித்தும், நடிகை த்ரிஷா பற்றியும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.  இந்த விவகாரம் தமிழக அரசியல் மற்றுமின்றி திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், ஏ.வி.ராஜுவின் கருத்துக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தன்னை பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 24 மணி நேரத்தில் ஏ.வி.ராஜூ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழ், ஆங்கில செய்தித்தாள்களில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும். மேலும் தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்களிலும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

நடிகை திரிஷா அனுப்பிய வழக்கறிஞர் நோட்டிஸ் பார்க்க

https://twitter.com/trishtrashers/status/1760554165565358246






Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback