Breaking News

உத்ரகாண்டில் லிவ் இன் உறவில் வாழ கட்டாயம் பதிவு செய்யவேண்டும், 21 வயது ஆகி இருக்கவேண்டும் மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை

அட்மின் மீடியா
0

உத்ரகாண்டில் திருமணம் செய்யாமல் லிவ் இன் உறவில் வாழ்பவர்கள்,கட்டாயம் பதிவு செய்யவேண்டும், 21 வயது ஆகி இருக்கவேண்டும் மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை

உத்ரகாண்டில் லிவ் இன் உறவில் வாழ கட்டாயம் பதிவு செய்யவேண்டும், 21 வயது ஆகி இருக்கவேண்டும் மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை

திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் உறவில் வாழ்வதற்கு 21 வயதிற்கும் மேல் ஆகியிருக்க வேண்டும் என்றும், லிவ் இன் வாழ்க்கை வாழ்பவர்கள் கட்டாயம்முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்றும், மீறினால் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் என்று பொது சிவில் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்திய நாட்டில் முதல் மாநிலமாக உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், மாவட்ட அதிகாரிகளிடம் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும், பதிவுசெய்யாவிட்டால், அதிகபட்சமாக 6 மாதங்கள் சிறைத்தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். 

 


மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ விரும்பும் 21 வயதுக்குக் குறைவானவர்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் பதிவு செய்ய வேண்டும். மாநிலத்துக்குள் மட்டுமல்லாமல், மாநிலத்துக்கு வெளியே லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ விரும்பினாலும் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback