வேளாண் பட்ஜெட் 2024 - 2025 அறிவித்த திட்டங்கள் என்ன என்ன முழு விவரம்....tn agri budget 2025
தமிழகத்தில் திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றத்தில் இருந்து தமிழக பட்ஜெட் தனியாகவும் வேளாண் பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது
நேற்று தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இன்று வேளான் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதன் காரணமாக விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய பட்ஜெட்டாக இருக்கும் என தெரிகிறது.
பட்ஜெட் சிறப்பம்சங்கள்
10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ₹6 கோடி மானியம்
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு
12,500 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி விரிவாக்க திட்டம்
சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருதுகளை வழங்க ₹5 லட்சம் ஒதுக்கீடு
பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ₹50 லட்சம் நிதி ஒதுக்கீடு!
விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய கோவையில் ஆய்வகம்!
வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ₹2 கோடி நிதி ஒதுக்கீடு!
ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்களை வளர்த்திட ₹1 கோடி ஒதுக்கீடு
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்துக்கு ₹206 கோடி ஒதுக்கீடு
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ₹200 கோடி ஒதுக்கீடு
பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ₹2.40 கோடி நிதி ஒதுக்கீடு.
உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ₹10,500 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ₹500 கோடி ஒதுக்கீடு
Tags: தமிழக செய்திகள்
